மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்று ஏற்பட போகும் மாற்றம்! யாருக்கெல்லாம் எச்சரிக்கை
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
திடீர் பண வரவு வரும் நிதி நெருக்கடிகள் நீங்கும்.நோய் பாதிப்புகள் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளைச் செய்யலாம் வெற்றி உண்டாகும்.
ரிஷபம்
பொருளாதார ரீதியான நெருக்கடிகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மிதுனம்
வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.
கடகம்
வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
சிம்மம்
உங்கள் உடல் நிலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவு செய்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும்.
கன்னி
வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு தேடி வரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம்.
துலாம்
பண விசயத்தில் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள்.
தனுசு
குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.
மகரம்
பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வீட்டில் உறவினர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர் பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.
கும்பம்
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனமும் விழிப்புணர்வும் தேவை. இரவு நேரங்களில் வாகன போக்குவரத்தை தவிர்த்து விடவும்.