மேஷம் ராசி அதிஷ்டம் தரும் பரிகாரங்கள்... பிரபல ஜோதிடரின் நேர்காணல்
மேஷம் ராசி அதிஷ்டம் தரும் பரிகாரங்கள் குறித்து Dr. ஹரிஷ் ஜோதிடர் நேர்காணல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
மேஷம் ராசி அதிஷ்டம் தரும் பரிகாரங்கள்
அதிர்ஷ்டம் என்று சொன்னால் அது எதார்த்தமான விஷம் கிடையாது. ஒவ்வொரு ராசிக்குமே 2ம் பாதம் என்று சொல்லப்படுவது, 2ம், பாவதபதி என்று சொல்வோம். இதை இரண்டை வைத்துக் கொண்டு தான் அதிர்ஷ்டம் வருமா, வராதா என்றும், அதை ஆக்டிவேட் செய்தால் என்னவெல்லாம் செய்யும்.. சில சுட்ஷமங்கள் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை செய்யும்போது இயல்பாகவே அதிர்ஷ்டம் பிறக்கும்.
அவர்களுடைய சுய ஜாதகங்களில் 2ம் பாவதம் சுத்தமாக அவுட் என்றால், அவர்கள் என்ன செய்தாலும் அதிர்ஷ்டம் வரவே, வராது. மிக முக்கியமான 2 சூட்சமங்கள் என்று பார்த்தால், ஒரு ஆணாக இருக்கும் பட்சத்தில் சுக்கிரன் நல்ல இடத்தில் இருந்தால், தனம், குடும்பம், செல்வாக்கு இவை அனைத்தும் வந்து விடும். இவை இரண்டும் ஒரு ஜாதகத்தில் அடி பட்டது என்றால், அதிர்ஷ்டம் கிடையாது.
எப்போதும் துரதிஷ்டமாகத்தான் இருக்கும். மேஷராசிக்கு பொருத்தவரை காலபுருஷம் 1ம் இடம் சொல்வார்கள். காலபுருஷம் 1ம் இடம் என்றால் லாபஸ்தானம். செவ்வாயோட வீடாக இருப்பதால் எப்போதுமே ஒரு விரைவான செயல் இருக்கும் அவர்களிடம். அதை மூர்க்கத்தனம் என்று கூட சொல்வார்கள். ஆனால், அதில் என்ன செய்கிறார்கள் என்று அந்த அளவிற்கு அவர்களுக்குத் தெரியாது.
ஆனால், அவர்களுடைய தன குடும்ப வாக்குஸ்தானம், அதிர்ஷ்டதானம் என்று பார்த்தால், 2ம் இடம் என்று சொல்வோம். இந்த இரண்டாம் வீடு தான் சுக்கிரனுடைய வீடு. அப்போது, நாம் என்ன செய்வோம்.... வீட்டிற்கு வரக்கூடிய பெண்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு தேவையான விஷயங்களை சரியாக செய்ய வேண்டும். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
மேஷ ராசிக்காரர்களை பொருத்தவரை இந்த இரண்டு விஷயங்களை சரியாக செய்தால் போதும். கெட்ட வார்த்தைகளை மேஷராசிக்காரர்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு காசு, பணம் வரவு எல்லாமே கிடைக்கும். அதிர்ஷ்டம் வேண்டும் என்றால், காமாட்சி அம்மன் வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் இளநீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இளநீரை அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் அதிர்ஷ்டம் வரும்.
மேஷராசிக்காரர்கள் என்ன தானம் செய்ய வேண்டும்?
வெத்தலை, பாக்கு, தேங்காய் இந்த மூன்றையும் சுமங்கலிக்கு நாம் தானம் செய்யலாம். அப்படி தானம் செய்யும்போது அவர்களுக்கு அதிர்ஷ்டம் கூடவே வந்துவிடும். மேஷராசிக்காரர்களுக்கு கிருத்திக்கை நட்சத்திரம் இருந்தால் நல்ல யோகமான அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும்.
மேஷராசிக்காரர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அவர்கள் வீட்டை விட்டு போகும்போது வலது பக்கம் காமாட்சி அம்மன் போட்டோவோ, அல்லது மகாலட்சுமி போட்டோவோ வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டு செல்ல வேண்டும்.
இப்படி செய்தால், பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அதிர்ஷ்டம் அதிகமாக கொடுக்கும். மேஷராசிக்காரர்கள் செவ்வாய், சனி சேர்ந்தால் தான் அவர்களுக்கு வேலைகளே அமையும்.
ஆஞ்சநேயர் வழிபாடு செய்தால் அவர்கள் செய்யும் வேலைகள் சார்ந்த பிரச்சினைகள் தீரும். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்ற வேண்டும். 5 வாரம் செய்ய வேண்டும். 5வது வாரம் முடிந்து 6-வது வாரம் அருமையான வேலைவாய்ப்பு லேட்டர் உங்களுக்கு வரும்.