கிழமைகளில் மறைந்திருக்கும் அதிர்ஷ்டம்.. தட்டி எழுப்பும் நிறங்கள்- அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக வாழ்க்கையில் வெற்றிப் பெறுவதற்கு நாம் என்ன தான் முயற்சிகள் செய்தாலும் ஜோதிடமும் நம் வாழ்க்கையில் மறைமுகமாக தாக்க செலுத்துகிறது.
ஜோதிட சாஸ்த்திரப்படி நடந்தால் சீக்கிரம் உச்சத்தை தொடலாம் என பலரும் கூறுவார்கள். எந்த தான் முயற்சி இருந்தாலும் லக் இருக்க வேண்டும்.
சிலர் இப்படி மறைமுகமாக ஜோதிட சாஸ்த்திரத்தை தான் நினைவுப்படுத்துகிறார்கள்.
அந்த வகையில் கிழமைகளுக்கும், நிறங்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான பூரண விளக்கத்தை பதிவில் பார்க்கலாம்.
7 கிழமைகள் அதற்கான நிறங்கள்
1. திங்கள்கிழமை
இந்து மதத்தின் படி வாரத்தின் முதல் நாள் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் வெளியில் செல்பவர்கள் வெள்ளை, கிரீம், இளஞ்சிவப்பு, வெளிர் நீளம் மற்றும் வெளிர்மஞ்சள் போன்ற குளிர் நிற ஆடைகளை அணிவது அவசியம். மாறாக இந்த நாளில் கருப்பு மற்றும் பிரகாசமான நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
2. செவ்வாய்கிழமை
இந்துக்களில் அதிகமானவர்களாக வணங்கப்படுகின்ற அனுமானுக்கு உரிய நாளாக செவ்வாய் இருக்கிறது. இந்த நாளில் பிரகாசமான ஆடைகளை அணிய வேண்டும். உதாரணமாக சிவப்பு, குங்குமம், ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறங்களை கூறலாம்.
3. புதன்கிழமை
புதன் வியாழனுக்கு அதாவது விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வெளியில் செல்பவர்கள் பச்சை நிற ஆடைகளை அணியலாம். இதனால் அறிவார்ந்த திறன் அதிகமாகும்.
4. வியாழக்கிழமை
வியாழக்கிழமை விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு பகவானை வணங்கும் பக்தர்கள் வெளியில் செல்லும் போது மஞ்சள் நிற ஆடைகளை அணியலாம்.
5. வெள்ளிக்கிழமை
இந்துக்களுக்கு மிக முக்கியமான நாளாக பார்க்கப்படும் வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவிக்கு விருப்பமான சிவப்பு நிறத்திலான உடைகளை அணியலாம்.
6. சனிக்கிழமை
சனிக்கிழமை என்றாலே அது சனி பகவானுக்கு உரிய நாளாக பார்க்கப்படுகின்றது. இந்த நாளில் கருப்பு மற்றும் நீல நிறங்கள் ஆடைகளை அணியலாம். அதாவது கருப்பு, அடர் பழுப்பு, அடர் நீளம், ஊதா அல்லது காபி போன்ற நிறங்களில் ஆடை அணியலாம்.
7. ஞாயிற்றுக்கிழமை
வாரத்தின் இறுதி நாளாக பார்க்கப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கிழமையில் சிவப்பு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை அணியலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |