நயன்தாராவின் இல்லற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கணிப்பு- சவால் விடும் ஜோதிடர்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருங்காலத்தில் பிரிவது உறுதி என பிரபல ஜோதிடர் கூறியது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் டாப்பில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் சில பிரபலங்களுடன் சர்ச்சையில் சிக்கினாலும் தற்போது குடும்பம், குழந்தை என சந்தோசமானதொரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இவரின் வெற்றிக்கு எப்போதும் தன்னுடைய கணவர் தான் காரணம் என மேடைகளில் மகிழ்ச்சியாக கூறியும் வருகிறார்.
ஜோதிடரின் கணிப்பு
இப்படியொரு நிலையில் பிரபல ஜோதிடர் வேணு சுவாமி, விக்னேஷ் சிவன்- நயன்தாரா பிரிவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இந்த சர்ச்சையை அதிகமாக வைரலாகி வருகின்றது. ஏனென்றால் சமந்தா- நாகசைன்யா இருவரும் திருமணமான புதிதில் இவரின் இதே போன்ற கணிப்பு வைரலானது.
இதனை தொடர்ந்து திருமணமாகி சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.
தற்போது இருவருமே திரையுலகில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பலிக்குமா?
இந்த சம்பவத்தை தொடர்ந்து “ நயன்தாரா பற்றிய கணிப்பு பலிக்காவிட்டால் நான் ஜோதிடத்திலிருந்து விலகுகிறேன்..” என்றும் குறித்த ஜோதிடர் சவால் விட்டுள்ளார்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் பிரிவார்களா? ஜோதிடரின் கணிப்பு பலிக்குமா? என ரசிகர்கள் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |