தீய சக்தியை ஓட ஓட விரட்டும் கிராம்பு.. பரிகாரம் எப்படி செய்யணும் தெரியுமா?
பொதுவாக நம் வீட்டு சமையலறையில் சமைப்பதற்காக பயன்படுத்தும் பொருட்கள் வீட்டின் நன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் சமையலில் வாசணைக்காக பயன்படுத்தப்படும் கிராம்புகள் வீட்டின் நன்மைக்காகவும் உதவிச் செய்கின்றன.
வீட்டில் கிராம்புவை அடிக்கடி பயன்படுத்தும் பொழுது எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வருவது குறைவாக இருக்கும். இதனால் தினமும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தை அடைவதற்கு வழிவகுக்கும்.
இவ்வாறான சிறப்புக்களை பெறுவதற்கான பரிகாரங்களை கிராம்புகளை கொண்டு எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பரிகாரங்கள்
1. விநாயகருக்கு வெற்றிலையில் கிராம்பு, ஏலக்காய் கட்டி வைத்து சமர்ப்பிக்க வேண்டும். இப்படி செய்தால் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர்வுக்கு வரும்.
2. 7 - 8 கிராம்புகளை எரித்து வீட்டின் ஒரு மூலையில் வைத்தால், வீட்டில் இருந்து ஆட்டம் காட்டும் எதிர்மறையான சக்திகள் தடம் தெரியாமல் ஓடும்.
3. எதிர்மறையான சக்திகள் மறைந்த பின்னர் வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
4. கருப்பு மிளகு, கிராம்பு இரண்டையும் தலையில் 3 முறை சுற்றி, யாரும் நடமாட இடத்தில் போடவும். இப்படி செய்தால் பணத்தினால் வரும் நெருக்கடிகள் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |