பிச்சை எடுக்கிறாரா? ஷங்கரின் உதவி இயக்குநர்...
பிரம்மாண்ட படைப்புக்கு பெயர் போனவர் இயக்குநர் ஷங்கர்.
இவரது படங்கள் அனைத்துமே ஏனைய படங்களை விட பார்ப்பதற்கு பிரம்மாண்டமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.
அந்த வகையில் இவரது ஜீன்ஸ், காதலன், இந்தியன் போன்ற படங்களுக்கு அவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் செல்வேந்திரன் அவர்கள்.
இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியதோடு மட்டுமில்லாமல் இவரே ஒரு படத்தை இயக்கவும் தொடங்கினார். அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.
தமிழில் 2009 மற்றும் தெலுங்கில் 2006ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்தப் படத்தின் பெயர் ஒரு காதலன் ஒரு காதலி. இந்தப் படத்தில்தான் நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதுமட்டுமில்லாமல் நடிகை ரம்பாவும் குறிப்பிட்ட இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் நினைத்ததைப் போல் வெற்றியடையவில்லை என்பதால் செல்வேந்திரன் அவர்களுக்கு அடுத்தடுத்து எந்தவொரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.
ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு உணவுக்கே வழி இல்லாமல் பிச்சை எடுக்கும் அளவுக்கு அவரது நிலைமை மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது இந்த நிலைமை தற்போது சமூக வலைத்தளங்களிலும் சரி கோலிவுட் வட்டாரத்திலும் சரி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இவரது இந்த நிலையை அறிந்த திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இவருக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று நினைத்து அவர்களது கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.