பிரபல இளம் நடிகர் புற்றுநோய் பாதிப்பால் திடீர் மரணம் - அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்!
அசாமை சேர்ந்த நடிகர் கிஷோ தாஸ் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அசாம் மாநிலம், திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் கிஷோர் தாஸ்(30). இவர் நடிப்பு, நடனம், மாடல், மற்றும் தொலைக்காட்சி என பன்முகம் கொண்ட நடிகர். 300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் நடித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழப்பா?
இந்த நிலையில், நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக கவஹாத்தியில் சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்தர சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார்.
தொடர் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் தீவிரத்தால் சிகிச்சை பலனின்றி கிஷோர் உயிரிழந்துள்ளார்.
இவரின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், . சக நடிகர்கள், ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் கிஷோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.