அட்ரஸ் கேட்க வந்து பெண்ணின் மார்பை தொட்ட இளைஞர்: இளம்பெண் புகட்டிய தக்க பாடம்! வைரலாகும் காட்சி
இளம்பெண் ஒருவருடன் இளைஞர் ஒருவர் அட்ரஸ் கேட்பது போன்று வந்து மார்பினை தொட்டுள்ளதையடுத்து பெண் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
அசாமில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சாலை ஒன்றில் சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பாவனா காஷ்யப் என்பவரிடம் விலாசம் கேட்டுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் பாவனா மார்பகத்தை சீண்டிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் இருந்து வேகமாக கிளம்ப முயன்றுள்ளான்.
இதனை சுதாரித்த பாவனா அந்த நபரின் ஸ்கூட்டரை வேகமாக இழுத்து, அருகே இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டுள்ளார். அதனால் அந்த நபரால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாவனாவுக்கு துணையாக இருக்க, நடந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து அந்த வீடியோவில் தனக்கு நடைபெற்ற இந்த கொடுமையை விளக்கி பெண்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, அத்துமீறி நடந்து கொண்ட நபரை வளைத்துப்பிடித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
மேலும், பாவனாவிடம் அத்துமீறிய நபர் மீது தற்போது டிஸ்புர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.