‘பாத்துக்கலாம்’ வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் சிக்னல் - தலைவணங்கிய தமிழக வீரர்!
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நேற்றைய போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில், ரிஸ்வான் மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்களை அடித்திருந்தார்.
தொடர்ந்து ஆடிய இந்திய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 35 ரன்னில் அவுட் ஆனார்.

The comeback is greater than the setback ?? pic.twitter.com/KlnD4GZ4ZO
— hardik pandya (@hardikpandya7) August 29, 2022
நான் பாத்துக்கிறேன்
அதன் பின்னர் ஜடேஜா மற்று ஹர்திக் பாண்டியா ஜோடி நிலைத்து நின்று ஆடியது. கடைசி ஓவரில் ஜடேஜா 35 ரன்னில், ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக், சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்திருப்பார்.
அப்போது, 4 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. அந்த ஓவரின் மூன்றாவது பந்து டாட் பாலாக கன்வெர்ட் ஆகியிருக்கும். இதனால், நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த தினேஷ் கார்த்திக் ஏதோ பேச, கமல் நடித்திருந்த விக்ரம் படத்தில் வரும் வசனம் போல், ‘நான் பாத்துக்குறேன்’ என கண்ணால் சிக்னல் கொடுத்திருப்பார் ஹர்திக் பாண்டியா.
அதன் பின்னர் அடுத்த பந்திலேயே, சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்திருப்பார். இதற்கு இந்திய அணி மிகுந்த மகிழ்ச்சியுடன் வெற்றியை கொண்டாடியது.

வெற்றிநாயகன் ஹர்திக் பாண்டியா
மேலும், தினேஷ் கார்த்திக்கும் தலைவணங்க, இந்த போட்டியில், ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமின்றி, 33 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றுள்ளார்.
Whenever I’m feeling low on confidence and high on self doubt, I’m going to play this gif in my mind pic.twitter.com/fDBnfVtq9T #HardikPandya
— Nandita Iyer (@saffrontrail) August 29, 2022
Beautiful Moment in India Vs Pak Match Today. Dinesh Karthik bowed before Hardik Pandya. Well done Team India. #INDvsPAK #IndiaVsPakistan #IndianCricketTeam #HardikPandya #DineshKarthik #AsiaCup2022 pic.twitter.com/vuro2ZXd7H
— Tarique Anwer (@tariqueSH) August 28, 2022