1 கோடி மனங்களை வென்ற Village Cooking Channel- முதல் ஆளாக வாழ்த்திய பிரபல வீரர்- யாருன்னு பாருங்க
தமிழில் எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை படைத்துள்ளது Village Cooking Channel.
ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமையை வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து டைமண்ட் பட்டனை பெறும், முதல் தென்னிந்திய சேனல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
தமிழர்களின் மனம் கவர்ந்த சேனலாக இது உருவானதற்கு இந்த குழுவினரின் உழைப்பே காரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களை இன்று உலகம் முழுவதும் போற்றி வருகின்றனர்.
தங்களுக்கே உரிய வெகுளிப் பேச்சு, கிராமத்தின் மணம் மாறாத சமையல் முறையில், நல்ல பசுமையான இடங்களில் மைப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இவர்களின் சேனல் குறுகிய காலத்திலேயே நல்ல ரீச் அடைந்தது என்றே கூறலாம்.
இவர்களுக்கு முதல் ஆளாக வந்து வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார் இந்திய அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின்.
