சக நடிகையுடன் காதல்.. லீக்கான அந்தரங்க வீடியோ? குக் வித் கோமாளி அஸ்வின் விளக்கம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நட்சத்திரங்கள் அஸ்வின் மற்றும் சிவாங்கி.
அஸ்வின் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில் தற்போது இணையத்தில் தன்னுடைய முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரவி வருவதாகவும், அது பொய்யான ஒன்று எனவும் அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி சக நடிகையுடன் அஸ்வினுக்கு காதல் என்றும் தகவல் வெளியானதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இம்மாதிரியான தகவல்கள் அனைத்தும் தவறான தகவல் என்றும் அதை தங்களின் ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது வளர்ந்து வரும் நடிகரான அஸ்வின், சினிமாவில் மட்டும் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
