மங்காத்தா நடிகருக்கு ஆண் குழந்தை பிறந்தது- குவியும் வாழ்த்து
மங்காத்தா நடிகருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அஷ்வின் ககுமனு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஷ்வின் ககுமனு. இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நடுநிசி நாய்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனையடுத்து, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித் நடித்து வெளியான ‘மங்காத்தா’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிறகு, 7ம் அறிவு, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பிரியாணி, மேகா, வேதாளம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அஷ்வின் ககுமனு நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘செந்தன் அமுதன்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
குழந்தைக்கு தந்தையானார் அஷ்வின் அஷ்வின் ககுமனு கடந்த 2016ம் ஆண்டு தன் காதலியான சோனாலி மணவாளன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இத்தம்பதிக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி அவிரா ரூபி ககுமனு என்ற பெண் குழந்தை பிறந்தது. அன்றைய நாளில் அஷ்வினுக்கும் பிறந்தநாள். தன் பிறந்த நாளிலேயே தனது மகளும் பிறந்ததை இரட்டை சந்தோஷத்தை சமூகவலைத்தளங்களில் அறிவித்தார் அஷ்வின்.
ஆண் குழந்தை பிறந்தது
இந்நிலையில், அஸ்வினின் மனைவி சோனாலி மீண்டும் கர்ப்பமானார். கடந்த 2ம் தேதி சோனாலிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தான் ஆண் குழந்தைக்கு அப்பாவான தகவலை தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் அஷ்வின் ககுமனு.
இதைப் பார்த்த சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.