நான் மோர்கனுடன் சண்டை போட்டது ஏன்? இரண்டு நாள் சர்ச்சைக்கு விளக்கமளித்த அஸ்வின்!
கடந்த நாட்களுக்கு முன் நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டியில், அஸ்வின் மற்றும் மோர்கன் பிரச்சினை பெரிய விவாதமாக இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில், இதைப்பற்றி எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்த அஸ்வின் தற்போது இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், பில்டர் பந்தை தூக்கி எறிந்துவிட்டார் என்பது தெரிந்த அடுத்த நொடியே நான் ஓட தொடங்கிவிட்டேன்.
அப்போது, பந்து பண்ட் மீது அடித்து ஓடியது எனக்கு தெரியாது. ஒருவேளை பந்து பண்ட் மீது அடித்தது தெரிந்தால் நான் ஓடி இருப்பேனா? கண்டிப்பாக ஓடி இருப்பேன். விதியில் அதற்கு இடம் உள்ளது. மோர்கன் சொன்னது போல நான் அவமானப்பட வேண்டியவரா? கண்டிப்பாக இல்லை. நான் சண்டையெல்லாம் போட வில்லை, நான் எனக்காக நின்றேன்.
என்னுடைய ஆசிரியர்களும், பெற்றோரும் நான் குழந்தையாக இருக்கும் போதே உனக்காக நீ எழுந்து நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதைத்தான் நான் செய்தேன். மோர்கானோ, சவுதியோ தங்களுக்கு கிரிக்கெட்டில் எது நியாயம் என்று படுகிறதோ அதை செய்யலாம். ஆனால் அவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டு அவமானகரமான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் மக்கள் சிலர் இதை விவாதம் செய்கிறார்கள். யார் இதில் நல்லவர், கெட்டவர் என்று இத வைத்து விவாதம் மேற்கொண்டு வருகிறார்கள். கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம் என்று சொல்லும் ரசிகர்களுக்கு ஒன்று சொல்கிறேன், கிரிக்கெட் என்பதை நாங்கள் எங்கள் கெரியராக ஆடி வருகிறோம்.
இந்த கிரிக்கெட்டில் ஒரு தவறாக த்ரோ மூலம் கிடைக்கும் கூடுதல் ரன் உங்கள் கெரியரை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது, நான் ஸ்டிரைக்கர் எண்டில் உள்ளவர் சில யார்டு தூரம் முன்பே ஓடி நின்று கொள்வது (மன் கட் சர்ச்சையை குறிப்பிடுகிறார்) உங்கள் கெரியரை காலி செய்யவும் வாய்ப்பு உள்ளது.
நீங்கள் ரன் ஓடவில்லை என்றாலோ, நான் ஸ்டிரைக்கர் எண்டில் உள்ளவரை எச்சரிக்கை செய்யவில்லை என்றாலோ ஒருவரை நல்லவரை என்று சொல்லி நீங்கள் குழப்ப கூடாது. ஏனென்றால் உங்களை நல்லவர், கெட்டவர் என்று சரிட்டிபிகேட் கொடுக்கும் நபர்கள் எல்லாம் ஏற்கனவே அவர்கள் வாழ்க்கையில் சாதித்து செட்டில் ஆகிவிட்டனர்.
இதனால், மைதானத்தில் ஆடும் போது உங்கள் உடல் பொருள் ஆவியை கொடுத்து, விதிகளுக்கு கட்டுப்பட்டு நடங்கள். ஆட்டம் முடிந்த பின் கைகுலுக்கிக் கொள்ளுங்கள். என்னை பொறுத்தவரை அதுதான் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் தவிர வேறு ஒன்றும் கிடையாது, என்று அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.