மிதுன ராசிக்காரர்களை ஆட்டிப்படைக்கும் அஷ்டம சனி! பாதிப்பை ஏற்படுத்துமா?
மிதுன ராசியினர்களுக்கு இந்த அஷ்டமச்சனி பாதிப்பை ஏற்படுத்துமா? அல்லது நன்மை தருமா என்பதை பற்றி அவரவர் பிறந்த ஜாதகத்தை வைத்தே கணிக்கப்படுகிறது.
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜாதகத்தில் குரு இருந்தால் அஷ்ட சனி பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், மிதுன ராசியில் சந்திரனுடன் ராகு அல்லது கேது இருந்தால் அவர்களுக்கு குடும்பம், தொழில் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்துமாம்.
இந்த ராசியினர்கள் அஷ்ட சனி முடியும் வரை திருமணம் செய்யக்கூடாதாம். மேலும், மிதுன ராசிக்கு எட்டாம் இடமான மகரத்தில் ராகு-கேது செவ்வாய், சனி இந்த கிரகங்கள் இருந்தால் அவருக்கு அஷ்டமத்துச் சனியால் பாதிப்பு உண்டு.
அவர்களுக்கு நல்ல திசையாக இருந்தால் பாதிப்பின் அளவு குறையும். பின் மகரத்தில் குரு, சுக்கிரன் இருந்தால் இந்த அஷ்டமச்சனி அவர்களை பாதிக்காது.
சனி அவர்களுக்கு 200 மடங்கு யோகமான அஷ்டமத்துச் சனியாக நடக்கும். இந்த காலக்கட்டத்தில், அவர்கள் பணம், பொருளாதாரம் அதிகரிக்கும்.
வீடு, வாகனம் தொழில் என அபிவிருத்தி அடையும். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தை வைத்துக் கொண்டு தான் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது, கெட்டது செய்யும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இதனால், தேவையற்ற பய உணர்வை தவிர்த்து சிவ வழிபாட்டில் ஆர்வம் காட்டினால் நன்மை உண்டாகும்.