கீர்த்தி பாண்டியனிடம் மனதை பறிகொடுத்த அசோக் செல்வன்! காதலுக்கு யார் காரணம் தெரியுமா?
நடிகர் அசோக் செல்வனும், நடிகர் அருண் பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் நேற்று திருநெல்வேலியில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில், இவர்களது திருமணம் செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியன் இடையே காதல் ஏற்பட்ட விதம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன், இவர் ஒரு நடிகையே. தும்பா, அன்பிற்கினியாள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும், நடிகர் அசோக் செல்வனுக்கு காதல் மலர்ந்ததே சுவாரசியமான ஒன்று தான்.
இருவரும் இணைந்து கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகும் “ப்ளூ ஸ்டார்” என்ற படத்தில் நடித்துள்ளனர், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் இதை தயாரிக்கிறது.
முன்னதாக கீர்த்தி பாண்டியன் இப்படத்திற்கு பொருத்தமாக இருப்பதாரா என படக்குழு யோசித்த நிலையில், பா.ரஞ்சித் தான் சரியாக இருப்பார் என பரிந்துரைத்தார்.
இதன்மூலமாக மட்டுமே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாகவும் மாறியது, தமது தயாரிப்பில் சந்தித்துக் கொண்ட ஜோடி நிஜ ஜோடியாக மாறியதால் சந்தோஷமாக இருக்கிறது என பா.ரஞ்சித் கூறிவருகிறாராம்.
பண்ணை வீட்டில் சொந்தபந்தங்கள் சூழ திருமணம் நடந்து முடிந்த நிலையில், விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்வுக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.