“இந்த பொண்ணு ஏன் இவ்வளவு கருப்பா இருக்கு..”விளாசும் நெட்டிசன்களின் வாயை வார்த்தையால் அடைத்த தொகுப்பாளர்!
நடிகர் அசோக் செல்வனின் மனைவி கருப்பாக இருந்தமையால் அவர்களின் திருமண புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
காதல் திருமணம்
தமிழ் சினிமாவில், அஜித் நடிப்பில் ஹீட்டான “பில்லா 2” என்ற படத்தில் அஜித்தின் சிறு வயது கதாபாத்திரத்தை நடித்து அறிமுகமானாவர் தான் நடிகர் அசோக் செல்வன்.
இதனை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களிலும், ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனாலும் தமிழ் சினிமாவில் இவருக்கு என ஒரு தனி இடம் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் அசோக்.
இவர் குறித்து பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் பெரியதாக அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில், அசோக் செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியனை திருமண செய்துக் கொண்டுள்ளார்.
பதிலடிக் கொடுத்த தொகுப்பாளர்
இவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அப்போது அசோக் செல்வனின் மனைவியின் நிறத்தை இணையவாசிகள் ட்ரோல் செய்தார்கள்.
தடபுடலாக நடந்தேறும் அசோக் செல்வன் திருமண ஏற்பாடுகள்.. எந்த மொழியில் அழைப்பிதழ் எடுத்துள்ளார் தெரியுமா?
அத்துடன் நெட்டிசன்கள், “ இந்த பொண்ணு என்னா இவ்வளவு கருப்பா இருக்கு.. அசோக் செல்வன் ஏமாந்துட்டாரா?“ என கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள்.
இது குறித்து பிரபல தொகுப்பாளர் ஒருவர்,“ இந்தியாவின் நிறம் கருப்பு தான். கருமை நிறம் அழகான வெள்ளை நிறத்தை விட இந்த நிறம் இயற்கையானது என அசோக் செல்வனுக்கு வந்த கருத்துக்களுக்கு இவர் ரிப்ளை கொடுத்துள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. நிறத்தையும் உடம்பையும் கேவலமாக வர்ணிக்கும் நெட்டிசன்களுக்கு இது ஒரு சிறந்த பதிலடியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |