3 kg எடை 10 மாத வேலைப்பாடு... திருமணத்தில் ராஷ்மிகா அணிந்திருந்த நகை இத்தனை கோடியா?
நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத்தில் அணிந்திருந்த பிரத்யேக முறையில் தயாரிக்கப்பட்ட தங்க நகைகளில் மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள். அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.

இந்நிலையில்,விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த 26 ஆம் திததி உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.
திருமணம் முடிந்த கையோடு திருமண புகைப்படங்களை ராஷ்மிகா மற்றும் விஜய் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தங்களின் மகிழ்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டனர்.

அவர்களின் திருமணத்தில் மணப்பெண் மற்றும், மணமகன் உடை மற்றும் நகை அழங்காரங்கள் இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தனது திருமணத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்திருந்த தங்க நகைகளின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தகவல்களின் பிரகாரம் ராஷ்மிகா திருமணத்தில் அணிந்திருந்த தங்க நகைகளின் மதிப்பு ரூ. 4 கோடி முதல் ரூ. 7 கோடி வரை இருக்கும் என தெரியவிக்கப்படுகின்றது. 2 முதல் 3 கிலோ வரை எடை கொண்ட இந்த தங்க நகைகளை தயாரிக்க 10 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தென்னிந்திய கோயில் நகைகளின் அசாதாரண பாணியில் இந்த நகைகள் ராஷ்மிகாவுக்காகவே பிரத்யேகமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |