வெறும் வயிற்றில் வெண்பூசணி சாறு குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
வெள்ளை பூசணிக்காய் போன்ற முழுக்க முழுக்க நீர்ச்சத்து இருக்கிற காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை.
குறிப்பாக சில குழந்தைகள் இதை பக்கத்தில் கூட சேர்ப்பதில்லை.
ஆனால் அதன் அற்புதமான நன்மைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
எடை இழப்புக்கு பூசணிக்காய் ஜூஸ்
பூசணிக்காயில் கலோரிகள் மிக மிகக் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், கூடுதல் எடையை விரைவாகக் குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது.
இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் நீண்ட நேரத்திற்கு பசியை தூண்டுவதில்லை.
அதோடு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விரைவாக எடையைக் குறைக்க உதவி செய்கிறது.
ஜூஸ் செய்வது எப்படி
தேவையான பொருள்கள்
- வெள்ளை பூசணி - 1 கப்
- இஞ்சி - ஒரு இன்ச் அளவு
- பூண்டு - 2 பல்
- உப்பு - சிறிதளவு
- எலுமிச்சை பழம் - 1
- தேன் - 1 ஸ்பூன்
- புதினா இலைகள் - 5
செய்முறை
முதலில் பூசணிக்காயை தோல் சீவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பூசணி உடன் பூண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து பிளண்டரில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இந்த ஜூஸை ஒரு கிளாஸில் வடிகட்டி ஊற்றி கொள்ளவும்.
எலுமிச்சை ஜூஸ், கருப்பு உப்பு, தேன் மற்றும் புதினா இலைகள் உட்பட மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, நன்கு கலக்கவும். பூசணி ஜூஸ் தயார்.
இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறைய பலன்களைப் பெற முடியும்.