ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு ஜாமீன்: முடிவுக்கு வந்த மகனின் சிறைவாசம்
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கடந்த மாதம் 2ம் தேதி சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்டதால், போதை பொருள் தடுப்பு அதிகாரிகளால் 3ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மகனை வெளியே கொண்டுவருவதற்கு ஷாருக்கான் 3 முறை முயற்சித்தும் முடியாமல் போன நிலையில், இன்று மும்பை நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரித்து இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆர்யன் தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்தியதாக போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தாலும், பார்ட்டியின் போது ஆர்யன் போதையில் இல்லை என்றும் அவரிடமிருந்து போதை பொருள் கைப்பற்றவில்லை என்றும் ஷாருக்கானின் வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.
ஷாருக்கானின் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக ஆர்யனை டார்கெட் செய்வதாக பாலிவுட் பிரபலங்கள் சிலரும், ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர்.