ஆர்யன் கான் சிறையில் என்ன உணவு சாப்பிடுகின்றார் தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஷாருக்கான் மகன் சிறை உணவை தவிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் அக்டோபர் 3ஆம் திகதி கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருக்கும் ஆர்யனுக்கு ஷாருக்கான் வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட சாப்பாடும் மறுக்கப்பட்டுள்ளது.
ஆர்யன் கானும் சிறையில் கொடுக்கும் உணவை உண்ணாமல், சிறை கேன்டீனில் பிஸ்கட் மற்றும் தண்ணீரை சாப்பிட்டு வருகிறாராம்.
ஆர்யன் மட்டும் அல்ல அவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட அவரின் நண்பர்களும் சிறை உணவை சாப்பிடாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.