ஆர்யா இல்லாமல் தனிமையில் கொண்டாட்டத்தில் இருக்கும் சாயிஷா! எங்கு தெரியுமா?
நடிகை சாயிஷா 25ஆவது பிறந்த நாளை அண்மையில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் 'வனமகன்' படத்தின் மூலம் சாயிஷா நடிகையாக அறிமுகமானார்.
மிக குறுகிய நாட்களிலேயே, தன்னுடைய நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.
இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து, 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த போது இவர்களிடையே காதல் ஏற்பட்டது. தங்களுடைய காதல் குறித்து வெளியே சொல்லாமல் இருந்த ஆர்யா திடீர் என திருமண தேதியை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இதை தொடர்ந்து இவர்களது திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடந்தது. இவர்களது திருமணத்தில் பல திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருமணத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே சாயிஷா நடித்தார். பின்னர் திரையுலகின் பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில், இவர்களுக்கு குழந்தை பிறந்தது.
சாயிஷா தற்போது தன்னுடைய குழந்தையை கவனிப்பதில் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சாயிஷாவின் தன்னுடைய 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். காஷ்மீரில் இரவு நேரத்தில் சாயிஷா கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஆர்யா எங்கே என்று கேள்வி எழுப்பி வருவதுடன் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


