பொம்மைக்குள் புகுந்த சாயிஷாவின் ஆத்மா: என்ன செய்தார் ஆர்யா? விறுவிறுப்பான சுவாரசியங்களுடன்
மிருதன், டிக் டிக் டிக் என வித்தியாசமான கதைக்களத்துடன் பேன்டஸி படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படம் தான் டெடி. எந்த ஒரு வேலையையும் நேர்த்தியாக செய்யக்கூடிய குணம் கொண்டவர் ஆர்யா, கல்லூரி மாணவியான சாயிஷா விபத்தில் சிக்குகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, ஒரு கும்பலின் சதிச் செயலால் கோமா நிலைக்கு செல்கிறார், அவரை கடத்தியும் செல்கின்றனர். அப்போது அருகில் இருக்கும் டெடி பியர் பொம்மையை சாயிஷா கெட்டியாக பிடித்துக் கொள்கிறார். அப்போது அவரின் ஆத்மா அந்த டெடி பியருக்குள் புகுந்துவிடுகிறது.
இதையடுத்து உயிர்பெறும் அந்த டெடி பியர், ஆர்யாவை சந்தித்து தன் நிலையை எடுத்து சொல்கிறது. ஆர்யாவும் அதற்கு உதவ முன்வருகிறார். இறுதியில் ஆர்யாவும் டெடியும் சேர்ந்து சாயீஷாவை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.