குழந்தையுடன் ஜாலியாக வெளிநாட்டில் சுற்றும் ஆர்யா- சாயிஷா! வைரலாகும் புகைப்படங்கள்
துபாயில் செல்ல மகளுடன் ஆர்யா- சாயிஷா ஊர்சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா, இவரும் பிரபல நடிகையான சாயிஷா என்பவரும் கடந்த 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வனமகன், கஜினிகாந்த் படங்களில் இணைந்து நடித்துள்ளனர், இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் மனங்கள் ஒத்துப்போக இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது, குழந்தைக்கு Ariana என பெயர் சூட்டினர்.
குழந்தையை ஒரு வருடமாகவே வெளியில் காட்டாமல் இருந்த தம்பதியினர், ஆர்யாவின் பிறந்தநாளன்று கணவருக்கு வாழ்த்துகூறியபடி டுவிட்டரில் பதிவிட்டார் சாயிஷா.
இந்நிலையில் குடும்பத்துடன் துபாய்க்கு அனைவரும் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கிருந்தபடியே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
பார்ப்பதற்கு அச்சு அசல் சாயிஷா போலவே இருப்பதாக பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.