24 வருடம் பழமையான பொருள்... ஆர்யாவின் மகளுக்கு கிடைத்த ஸ்பெஷல் பரிசு
நடிகர் ஆர்யாவின் மகள் அர்யானாவின் இரண்டாவது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளி வைரலாகி வருகின்றது.
நடிகர் ஆர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காதர்பாட்ஷா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
பல படங்களில் நடித்த இவர் கடந்த 2019ம் ஆண்டு சாயிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்யானா என்ற மகள் உள்ளார்.
சமீபத்தில் இவர்களது மகளின் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. வீட்டில் மிகவும் சிம்பிளாக அலங்காரம் செய்யப்பட்டு கொண்டாடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சாயிஷா வெளியிட்ட காணொளி
சாயிஷா வெளியிட்ட காணொளியில், இரண்டு என்ற எண்ணில் வடிவமைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தியை எடுத்து காண்பித்தார்.
இந்த மெழுகுவர்த்தியானது தனது இரண்டாவது பிறந்தநாளில் தனது தாயார் வாங்கியுள்ளது என்றும் 24 ஆண்டுகள் பத்திரமாக வைத்து தற்போது தனது மகளின் பிறந்தநாளுக்கு பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை சாயிஷா இரண்டு வயதாக இருந்தபோது அவரது அம்மா வாங்கிய பிறந்தநாள் கிப்ட் தற்போது சாயிஷாவின் மகளின் இரண்டாவது பிறந்தநாளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சாயிஷா, இந்த மெழுகுவர்த்தி தனது இரண்டாவது பிறந்த நாளின் போது தனது தாயார் வாங்கியது என்றும் அதை பத்திரமாக 24 ஆண்டுகள் பாதுகாத்து தற்போது தனது மகளின் பிறந்தநாளில் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.