ஆர்யாவின் முன்னாள் காதலி இப்போ என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா? இன்னும் அவரை மறக்கலையா?
நடிகர் ஆர்யாவின் முன்னாள் காதலியான நடிகை அபர்ணதியின் அண்மைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
17 வயது குறைவான சாயிஷாவை திருமணம் செய்து சமீபத்தில் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார்.
திருமணத்திற்கு முன் தனக்கு பெண் பார்க்க பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.
ஆர்யாவை திருமணம் செய்ய 16 மாடல் நடிகைகள் போட்டியாளர்களாக களமிரக்கினார்.
அதில் ஆர்யாவை உருகி உருகி காதலித்தவர்களில் ஒருவராக அபர்ணதி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தது.
மாடலாக இருந்து நடிகையாக மாறிய அபர்ணதி
இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு பின் அபர்ணதி நடிகையாகிவிட்டார். ஜிவி பிரகாஷ் நடித்த ஜெயில் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தற்போது அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதே சமயம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபர்ணதி 6y என்ற எழுத்தினை இன்னும் வைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஆர்யா மீது இன்னும் காதலில் இருக்கிறீர்களா அபர்ணதி என்று கேள்வி எழுப்பியும் வருகிறனர்.