அரவிந்தசாமியை தத்து கொடுத்த சீரியல் நடிகர்: உண்மையான அப்பா இவர் தான்!
தான் பெற்ற பிள்ளையான அரவிந்தசாமியை தன் மனைவியின் அக்காவிற்கு தந்துக் கொடுத்திருக்கிறார் சீரியல் நடிகர் டெல்லி குமார்.
நடிகர் அரவிந்தசாமி
90களில் பெண்களின் கனவுக் காதலனாக இருந்த அரவிந்தசாமி தளபதி திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் ரோஜா, பம்பாய், மின்சார கனவு என பல படங்களில் நடித்து டாப் ஹீரோவாக மாறினார்.
இவர் 1994ஆம் ஆண்டு காயத்ரி என்பவரை திருமணம் செய்து 2014ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்ற நிலையில் இவரே அவர்களை வளர்த்து வருகிறார்.
அரவிந்தசாமியின் உண்மையான அப்பா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் நடித்து பிரபல்யமானவர் தான் டெல்லி குமார். இவர் வெள்ளித்திரையில் குணசித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.
மேலும், அரவிந்தசாமியின் உண்மையான அப்பாவும் இவர் தான். இந்நிலையில், தற்போது இவர் அரவிந்தசாமி பற்றி நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதில் அரவிந்த் சாமிதன்னுடைய மகன் என்றும் அவர் பிறந்ததும் அவரை மனைவியின் அக்காவிடம் தத்துக் கொடுத்ததாகவும் அரவிந்தசாமி என்னுடைய மகன் தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |