ரோட்டு கடைக்கு சென்று நடிகர் அருண் விஜய்! அம்மாவைக் கண்ட தருணம்.. வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்
நடிகர் அருண்விஜய் ரோட்டுக்கடை ஒன்றில் மீன் வறுத்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழும் அருண்விஜய், ஹீரோவாக அறிமுகமாகி, பின்னர் வில்லனாக அவதாரம் எடுத்து தமிழ் சினிமாவை கலக்கி வருகின்றார்.
தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் காயம் ஏற்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பில் இருந்து விலகி இருந்தார்.
தற்போது காயம் சரியாகி மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் அருண்விஜய், படப்பிடிப்பு தளத்தின் அருகே இருந்த ரோட்டு கடை ஒன்றுக்கு உணவருந்த சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், அந்த கடையில் மீன் வறுத்துக்கொண்டிருந்த அம்மாவை கட்டியணைத்தவாறு, அருண்விஜய் மீன் பொறிக்கும் புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார்.