இந்த சிறு வயதுப் புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று தெரியுமா? அடடே இவரா அது
நடிகர் விஜய்குமாரின் மகனான அருண் விஜய் தற்போது சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார்.
ஹீரோ, வில்லன் என எந்த கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் கலக்கி வருகிறார். சரியாக கூறப்போனால் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார்.
இவர்களின் குடும்பத்தை எடுத்துக் கொண்டாலே அனைவருமே சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள்தான்.
ஆரம்ப கட்டத்தில் கதாநாயகனாக சில படங்களில் நடித்தவர், சில காலம் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். இவரது நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவவே பட வாய்ப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
கடைசியில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் விக்டர் என்ற நெகட்டிவ் ரோலில் நடித்தார்.
அந்தத் திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பிப்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
என்னை அறிந்தால் திரைப்படத்துக்கு பின்பு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும், தான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் எனக் கூறியதால், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் அருண் விஜய்யின் சிறிய வயது புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
இவரது சிறு வயது புகைப்படத்தை பார்த்தவர்கள் அப்போவே இவர் பிரபலமாக இருந்திருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.