மகனை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச் சென்ற விஜயகுமார்.. பதிவால் கவலையடைந்த ரசிகர்கள்
கை மற்றும் கால் பகுதிகளில் எலும்பு முறிந்த நிலையில் நடிகர் அருண் விஜய் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அருண் விஜய்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் ஒரே மகன் ஆவார்.
திரையுலகில் பல வருடங்களாக போராடி கொண்டிருக்கும் அருண் விஜய் தனக்கான ஒரு அங்கீகாரம் கிடைப்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் சமிபத்தில் இவர் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்றது.
அருண் விஜயுடன் இணைந்து இந்த படத்தில் எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன், பரத் போப்ன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த மிஷன் சாப்டர் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றது.
படுக்கையோடு இருக்கும் புகைப்படங்கள்
இந்த நிலையில் சினிமாவை போல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அருண் விஜய் அவ்வப்போது குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அந்த வகையில், கை, கால்களில் அடிப்பட்டிருப்பது போல் ஒரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். மிஷன் சாப்டர் 1 திரைப்படத்திற்கான சண்டை காட்சிகள் எடுக்கும் பொழுது எலும்பு முறிவுகள் ஏற்பட்டது.
அத்துடன் "தசை நார் கிழிந்ததால் இரண்டு மாதங்களாக நான் வலியை அனுபவித்து வருகிறேன். உங்களுடைய அன்பு என் வலியை மறக்கச் செய்தது.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் பகிர்ந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், அருண் விஜயிற்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |