அருண் விஜய் வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்: அழகில் தேவதையாக ஜொலித்த மகள்
நடிகர் அருண் விஜய் தனது நாயின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அருண் விஜய் தான் வளர்த்து வரும் நாய் ருத்ராவின் பிறந்தநாளை சிறப்பாக குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
சிறந்த கதைகளை தெரிவு செய்து நடித்து வரும் இவரது படங்களுக்கு ரசிகர்களிடையே ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகின்றது.
தற்போது இவரது நடிப்பில் ஹரி இயக்கியுள்ள யானை படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங், டப்பிங் உள்ளிட்டவற்றை முடித்துள்ள படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விறுவிறுப்பாக நடத்தி வரும் நிலையில், விரைவில் படத்தின் வெளியீடு குறித்து அறிக்கை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் தனது வீட்டின் மற்றும் படங்களின் முக்கிய அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறார். ரசிகர்களுடன் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் உள்ளார்.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் உள்ளத்தை அள்ளுகிறது. தனது வீட்டில் வளர்த்துவரும் ருத்ரா என்ற நாயின் 4வது பிறந்தநாளை தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
அவரது மகன் மற்றும் மகளுடன் அவர் ருத்ராவிற்கு பிறந்தநாள் கேப் மாட்டி, கேக் வெட்டி, கேக் ஊட்டிவிட்டு மகிழ்ந்துள்ளார்.