நான் செய்தது தப்பு தான்.. சேதுபதி பட இயக்குநர் மன்னிப்பு கோறல்- அப்படி என்ன நடந்தது?
சேதுபதி பட இயக்குநர் அருண்குமார், “நான் செய்தது தப்பு தான்.. இப்போ தான் தெரியுது..” என பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அருண் குமார்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர் தான் இயக்குநர் அருண்குமார்.
இவர், முதுமையிலும் காதல், ஒரு காரின் மீது உள்ள பிரியம் இவை இரண்டையும் கருவாக வைத்து இயக்கிய திரைப்படம் தான் பண்ணையாரும் பத்மினியும். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி என்ற திரைப்படம் எடுத்தார். அதன் பின்னர், சித்தார்த்தை வைத்து இயக்கிய படம் தான் சித்தா. இந்த திரைப்படம் சற்று வித்தியாசமாக குழந்தைகளுக்கு நடக்கும் அநீதியும் அதனால் தவறுதலாக மாற்றிக் கொள்ளும் இளைஞனின் கதையையும் கருவாக வைக்கப்பட்டிருந்தது.
சித்தா திரைப்படம் கதாநாயகருக்கும், அருண் குமாருக்கும் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் சித்தா திரைப்படத்திற்கு பின்னர் விக்ரமை வைத்து வீர தீர சூரன் திரைப்படத்தை இயக்கினார்.
பல பிரச்சினைகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானாலும், நல்லதொரு வரவேற்பை பெற்றது.
நான் தவறு செய்து விட்டேன்..
இந்த நிலையில், சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு அருண் குமார் பேட்டிக் கொடுத்துள்ளார்.
அதில், “நான் சேதுபதி படத்தில் ஒரு தவறு செய்து விட்டேன்.. அந்த திரைப்படத்தில் கணவன்- மனைவி சண்டையில் சேதுபதி, ரம்யாவை அடிப்பார். அப்போது, ரம்யாவின் அம்மா, ரம்யாவை அழைப்பார்,“ வா வீட்டுக்கு போகலாம்..” என்று, அதற்கு ரம்யா,“இப்போ அடிச்சா திரும்ப வந்து கொஞ்சுவான்.. அதற்கு நான் இங்கு இருக்கணும்..” எனக் கூறுவார்.
இந்த கருத்தை பெண்கள் அவர்களுடைய whatsapp status- ஆக வைக்கும் பொழுது தான் இது சமூகத்திற்கு தவறான கருத்து என்பது புரிந்தது. அப்போது நான் அதனை யோசிக்கவில்லை. பெண்கள் மன்னிக்கவும்..” என பேசியிருக்கிறார்.
இந்த காணொளி இணையவாசிகள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |