விபத்திற்குள்ளான ராணுவ விமானம்: படுகாயங்களுடன் மீட்கப்பட்ட முப்படை தளபதி! பரபரப்பான புகைப்படம்
இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தமிழ்நாட்டின் குன்னூர் காட்டுப்பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகியிருப்பது இந்தியா முழுக்க பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
குறித்த விமானத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட சில முக்கிய தளபதிகளும் பயணித்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூரில் இருந்து MIL MI 17 ரக விமானத்தில் கிளம்பிய நிலையில் சற்று நேரத்தில், குன்னூரில் தாழ்வாக பறந்துள்ள நிலையில் மரத்தில் மோதி தீப்பிடித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் பல விதமான MIL MI 17 வகை ராணுவங்கள் பயன்படுத்தப்படுகிறது. வெலிங்டன் ராணுவப் பள்ளியில் மதியம் 2-45 மணிக்கு முப்படை தலைமை தளபதியான விபின் ராவத் உரையாற்ற வந்த போது, இறங்கு தளத்தில் விமானம் இறங்கும் போதே, மிகவும் தாாழ்வாக பறந்துள்ளது.
ஆனால், மேகமூட்டம், மூடுபனி காரணமாக கணிப்பு பொய்த்து மிகத் தாழ்வாகப் பறந்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
ஆனால் குறித்த விமானத்தில் விவிஐபிக்கள் பயணித்ததால் பல சோதனைக்கு பின்பே இந்த விமானம் புறப்பட்டுள்ளது. விமானத்தின் கருப்புபெட்டியினை கண்டுபிடித்தால் மட்டுமே விபத்திற்கான காரணம் தெரியும் என்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளது அதிகாரப்பூர்வமாக இந்திய விமானப்படை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நாளை இறுதிமரியாதை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
