நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளா இது? வைரல் புகைப்படம் இதோ
பிரபல நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோவாக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் அர்ஜுன் சர்ஜா. இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றினை பெற்றது.
ஆக்சன் கிங் என்று பெயரெடுத்த நடிகர் அர்ஜுன் கடந்த 1988ம் ஆண்டு கனடா சினிமாவில் பிரபல நடிகையான நிவேதிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் 2013ம் ஆண்டு வெளியான பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். பின்பு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
இவ்வாறு அர்ஜுனின் மூத்த மகள் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இளைய மகள் அஞ்சனா பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகின்றார்.
உலகில் பல ஹேண்ட்பேக் தயாரிக்கும் தொழிற்ச்சாலைகள் இருந்தாலும் மற்றவர்க்ளிடம் இருந்து மாறுபட்டு பழங்களின் தோளை பயன்படுத்தி ஹேண்ட்பேக்கை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா அர்ஜுன் புகைப்படத்தினை பலரும் அவதானித்த நிலையில், தற்போது இளைய மகள் அஞ்சனாவின் புகைப்படமும் வைரலாகி வருகின்றது.