ஆம்புலன்ஸ் ஓட்டுனராக மாறிய இளம் நடிகர் அர்ஜுன்! லீக்கான புகைப்படம்.... ஷாக்கான ரசிகர்கள்
இந்தியாவில் கொரோனா தொற்று நோய் உலக அளவில் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.
ஒரு வருடத்துக்கு முன்பு உலகில் தோன்றிய கொரோனா எனும் கொடூர வைரஸ் தொற்று நோய் உலகின் பல நாடுகளை உலுக்கியது.
இதனிடையே அரசு மட்டுமல்லாமல் நடிகர்களும் மக்களுக்கு தங்களாலான உதவிகளை, சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

அண்மையில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் விஜய் ரசிகர்களுமான சிலர் விருத்தாசலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவி செய்தனர்.
அந்த வகையில் பிரபல கன்னட நடிகர் அர்ஜுன் கௌடா ஆம்புலன்ஸ் டிரைவராக பொறுப்பேற்று இந்த பாண்டமிக் காலத்தில் உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்து வருகிறார்.
அவருடைய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ள அர்ஜூன் கௌடா, அனைவருக்கும் நன்றி கூறியதோடு தன்னை தொடர்ச்சியாக ஊக்குவித்து வரும் மக்களுக்கு நன்றி கூறி இந்த வாய்ப்பு அளித்தமைக்கு பிரபல ஆம்புலன்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.