பூசணிக்காய் இதெல்லாம் பண்ணுமா? இது தெரியாம போச்சே
இந்த காலகட்டத்தில் சைவம் சாப்பிடும் நபராக இரு்தாலும் சரி அசைவம் சாப்பிடும் நபராக இருந்தாலும் சரி எந்த மரக்கறியை எடுத்து கொண்டாலும் பூசணிக்காயை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை குறைவு.
ஆனால் இந்த பூசணிக்காயில் அதிக நன்மைகள் உள்ளது. நமது உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இந்த பூசணிக்காய் தீர்வு தரும்.
பூசணிக்காயில் அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்ஸ்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது
மற்றும் கலோரிகள், ப்ரோட்டீன், கார்போஹைட்ரேட், சோடியம் போன்ற பல சத்துக்களும் நிறைந்து உள்ளன.
இந்த பூசணிக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் எமது உடலுக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
பூசணிக்காயில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ எனும் சத்துக்கள் மூலம் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி நோய் எதிர்ப்பு சக்கியை அதிகரிக்கவும் உதவுகின்றது.
நமது உடலில் சேரும் தொற்றுக்களை புறந்தள்ளி நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கின்றது.
இரத்த ஓட்டம்
இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பது அவசியம். பூசணிக்காயில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுவதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.
இதனால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கண்பார்வை குறைபாடு
மனிதர்களுக்கு முதுமைப்பருவத்தில் வரும் கண்பார்வையின் குறைபாட்டிற்கு பூசணிக்காயில் காணப்படும் பீட்டா கரோட்டின் பெரும் உதவி புரிகின்றது.
மாகுலர் டிஜெனரேஷன் எனும் நோயில் இருந்து நம்மை பாதுகாப்பதிலும் பெரும் பங்கு கொள்கிறது.
சரும பளபளப்பு
பெண்கள் எல்லோரும் அவர்களின் உடல் அழகில் கவனம் செலுத்துவது அதிகம். அந்த வகையில் பூசணிக்காயில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ, பீட்டா கரோட்டின் சருமத்தை பளபளப்பாக்கும் மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தவும் உதவுகின்றது.
செரிமான பிரச்சனை
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பூசணிக்காய் உண்பது மிகவும் நல்லது. அதில் உள்ள ஃபைபர் சத்து மற்றும் ப்ரீபயாடிக் கண்டெண்ட் குடல் இயக்கத்தை சீராக வைத்து செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.
உடல் எடை குறைப்பு
பூசணியி் கலோரிகள் மிகவும் குறைவு. அதை எவ்வளவும் உண்ணலாம் இதில் உள்ள ஃபைபர் கன்டென்ட் வயிறு நிறம்பிய உணர்வை கொடுக்கும். இதனால் நமது உடல் எடையை குறைக்கவும் இது உதவும் உடல் எடையை குறைப்பவர்கள் இதை தாராளமாக உண்ணலாம்.
மூட்டு வலி
மூட்டுவலி உள்ளவர்கள் தசை அழற்சி உள்ளவர்கள் பூசணிக்காய் சாப்பிடுவது நல்லது. இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுவலி மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.