வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றனவா! விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளது பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள்?
வீனஸ் கிரகத்தில் பாஸ்பீன் வாயு இருப்பதாக வேல்ஸில் இருக்கக்கூடிய கார்டிஃப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. இந்த பாஸ்பீன் வாயுவானது உயிரினங்கள் மூலம் வெளியிடக் கூடியது.
இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதை விட பாஸ்பீன் வாயு தற்போது ஆழமான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
2023 ஆம் ஆண்டு கார்டிஃப்பில் நடந்த ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டியின் நேஷனல் அஸ்ட்ரானமி சந்திப்பின் போது கிரீவ்ஸ் என்ற விஞ்ஞானி ஒருவர் இந்த தகவலை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். மேலும், செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு வீனஸ் கிரகத்தில் உள்ள மேகங்களில் பாஸ்பீன் வாயு இருப்பதாக கண்டுபிடித்தனர். இது, உயிரினங்கள் அங்கு வாழ்வதற்கான முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.
பின்னர், கிரீவ்ஸ் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் ஹவாயில் அமைந்துள்ள மௌனா கியா அப்சர்வேட்டரியில் வைக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் டெலஸ்கோப்பை பயன்படுத்தி வீனஸ் கிரகத்தின் வளிமண்டல ஆராய்ச்சியை செய்தனர்.
மேலும், அவர்கள் வீனஸ் கிரகத்தின் நடுப்பகுதி மற்றும் மேற்பகுதியினை ஆய்வு செய்த போது, வீனஸ் கிரகத்தின் வளிமண்டலத்தில் பாஸ்பீன் வாயு இருப்பதாக யூகித்தனர். ஆக்சிஜன் குறைவாக இருக்கும் நேரத்தில் உயிரினங்கள் பாஸ்பீன் வாயுவை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பாஸ்பீன் வாயு
பூமியில் ஹைட்ரஜன் வாயு குறைவாக இருக்கும் சூழ்நிலையில் பாஸ்பீன் வாயு வெளியாகிறது. இதனை, அடிப்படையாக வைத்தே வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதாரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
imperial
இருந்தாலும், பாஸ்பீன் வாயு இருப்பதால் மட்டுமே அங்கு உயிரினங்கள் வாழ்வதற்ககு சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பிவிட முடியாது என சில ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |