கொரோனா தடுப்பூசியில் மைக்ரோ சிப்பா? வதந்திகளை நம்பாதீர்கள்
கொரோனா தடுப்பூசியில் உலோகங்கள் இருப்பதாகவும், மைக்ரோ சிப் இருப்பதாகவும் கொரோனா தடுப்பூசிக்கு எதிரானவர்கள் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்னர், கைகளில் காந்தங்கள் ஒட்டுவதாக சிலர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன?
அவர்கள் கூறுவது போன்று எந்த தடுப்பூசியிலும் காந்த சக்தியோ, மைக்ரோ சிப்களோ இல்லை.
இதுகுறித்து சக்தி வாய்ந்த காந்தங்களை ஆராய்ச்சி செய்யும் எரிக் பாம் கூறுகையில், இதில் எந்தவித உயிரற்ற காரணிகளும் இல்லை.
தடுப்பூசி செலுத்தப்படும் ஊசித்துளைகள் மிகவும் சிறியவை, அப்படி ஒருவேளை காந்தப்புலன் கொண்ட ஒரு பொருளை உட்செலுத்தினால் கூட, அது மிக சிறியதாகவும், தோலோடு தோலாக காந்தத்தை ஒட்டவைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்காது.
தோல் ஈரப்பதம் மற்றும் பரப்பின் அழுத்தம் காரணமாக சிறிய பொருட்கள் தோலில் காந்த விசையின்றி ஒட்டும்.
இருப்பினும் காந்த சக்தி வீடியோக்களை தடுப்பூசி எதிர்ப்பு குழுவினர் பகிர்ந்து வருகிறார்கள்.