மகளுடன் அர்ச்சனா வெளியிட்ட புகைப்படம்: எந்த நிகழ்ச்சியா இருக்கும்? குழப்பத்தில் ரசிகர்கள்
தொகுப்பாளினி அர்ச்சனா தனது மகளுடன் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தமிழில் முன்னணித் தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.
பின்பு பிரபல ரிவியில் சில முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய இவருக்கு, திடீரென மூளையில் ஏற்பட்ட பிரச்சினையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவினால், அவதிப்பட்ட இவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் 16 தையல்கள் வலது காலில் போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு அர்ச்சனா பதில் அளிக்கையில், 'நீங்கள் கேட்டுக்கொண்டால் இப்போதே நான் வரத் தயார். ஆனால், என்னுடைய வலது கால் தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன.
மருத்துவர்கள் அங்கிருந்து தோல் மற்றும் தசைகளை வெட்டி எடுத்து அதை என்னுடைய செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவை அடைக்கப் பயன்படுத்தியுள்ளனர்.
படப்பிடிப்புக்குச் சென்றால் அங்கு 15 அல்லது 16 மணி நேரம் நிற்க வேண்டியிருக்கும். என் கால்கள் இன்னும் பலவீனமாக இருப்பதால், மீண்டும் திரும்பி வர எனக்கு சில நாட்கள் ஆகும்.
செப்டம்பர் 3ஆம் தேதி எனக்கு ஒரு பரிசோதனை உள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 10 அன்று மீண்டும் வருவேன்'' இவ்வாறு அர்ச்சனா கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது மகளுடன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அர்ச்சனா கூறியது போன்று 10ம் திகதி நிகழ்ச்சிக்கு வந்தவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் மகளுடன் வெளியிட்ட புகைப்படத்திலும், ஏதோ நிகழ்ச்சியில் இருப்பது போன்று தெரிவதால், ரசிகர்கள் எந்த நிகழ்ச்சி இது? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.