‘எல்லாரும் நாய் மாதிரி இருக்கீங்க..’ போட்டியாளர்களை சரமாரியாக பேசிய அர்ச்சனாவின் அம்மா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது Freeze டாஸ்க் வைக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளே வந்த அர்ச்சனாவின் தாய் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 75 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 78 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் ரவீனா, விசித்ரா, சரவணன் என மூன்று பேர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இந்த வாரம் தற்போது Freeze டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது.
நாய் என்று கூறிய அர்ச்சனாவின் அம்மா
இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்துள்ள நிலையில், அர்ச்சனாவின் பெற்றோரும் வந்துள்ளனர். நன்றாக பேசிக்கொண்டிருந்த அர்ச்சனாவின் தாய் திடீரென போட்டியாளர்களை நாய் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அர்ச்சனாவின் தாய், ‘டிவியில் பார்க்கும் போது எல்லாரும் நல்லா தெரிந்தீர்கள், நேரில் பார்த்தால் நாய் மாதிரி இருக்கீங்க..’ என்று கூறினார்.
அதை கேட்டதும் அனைவரும் சிறிது நேரம் திடுக்காகினர். ‘அம்மா.. இதெல்லாம் கெட்ட வார்த்தம்மா.. இதை ஏன் பேசுன?’ என்று அதட்ட, ஒரு நொடி சுதாரித்த அர்ச்சனாவின் தந்தை, ‘யாரும் தப்பா நினைக்காதீங்க.. எல்லாரும் ஒல்லியா இருக்கீங்க.. அப்படிங்கிறதை தான் அவ அப்படி சொல்றா, அவளுக்கு பேசத் தெரியாது’ என்று சரி செய்தார்.
அத்தோடு, மனைவியின் பேச்சை தலையில் அடித்து நொந்து கொண்டார். பின்பு இருவரும் அர்ச்சனாவிற்கு அறிவுரை கூறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |