மூளையிலிருந்து மூக்கிற்கு வந்த நீர்: தொடையில் எடுக்கப்பட்ட சதை! அர்ச்சனாவிற்கு என்ன ஆச்சு? மகள் பகிர்ந்த காணொளி
நடிகை அர்ச்சனாவின் உடலுக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்தும், தற்போது அவரது நிலை குறித்து அவரது மகள் மற்றும் தங்கை காணொளி ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களுக்கு தெளிவு படுத்தியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் தான் அர்ச்சனா.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் வழக்கம் போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்த இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சமீபத்தில் தனக்கு மூளையில் சிறு பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறி ரசிகர்களை பிரார்த்தனை செய்யுமாறு கூறியிருந்தார்.
அதன் பின்பு இவரது மகள் ஜாரா, சர்ஜரி முடிந்துவிட்டது என்று மருத்துவமனையிலிருந்து அப்டேட் கொடுத்தார்.
தற்போது மகள் ஜாரா மற்றும் அர்ச்சனாவின் தங்கை அனிதாவும் நடந்தது என்ன? எவ்வாறான சிகிச்சை செய்துள்ளனர்? மக்கள் கவனமாக இருப்பதற்கு சில விழிப்புணர்வு கருத்தினையும் கூறியுள்ளனர்.