பெயரையே கெடுத்துட்டாங்க…சேனல் மாறியதும் வெளுத்து வாங்கிய பிரபலம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வில்லி போலவே அம்மாவை தவறாக காட்டி வந்ததாக தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனா அதிலிருந்து விலகிவிட்டார்.
சமீபத்தில் அர்ச்சனா ஜீ தமிழுக்கு சென்றார்.

அதில் ஒளிபரப்பாகும் சூப்பர் மாம் என்கிற ஷோவை அவர் தனது மகள் சாராவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகின்றார். சேனல் மாறியதும் அர்ச்சனாவின் மகள் சாரா, பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடி உள்ளார்.
அவர் கூறியதாவது, “என் அம்மா பிக்பாஸ் ஷோவில் கலந்துகொண்டது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் என் அம்மாவின் உண்மையான கேரக்டரை அதில் அவர்கள் காட்டவில்லை.
அவரை வில்லி போலவே தவறாக காட்டி வந்தார்கள். அதன்மூலம் என் அம்மாவின் பெயரையும் கெடுத்துவிட்டார்கள். அந்நிகழ்ச்சி மூலம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்தது” என சாரா கூறியுள்ளார்.