இவ்வளவு விஷத்தன்மை கொண்டதா அரளிப் பூ? பலரும் அறியாத அதிர்ச்சி உண்மை
அரளி செடியின் குணங்கள் மற்றும் அதிலுள்ள ஆபத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலும் கோவில்களில் மாலையாக பூஜைக்கு பயன்படுத்தப்படும் அரளிப்பூவை பக்தர்களுக்கு நைவேத்தியமாகவும், பிரசாதங்களிலும் பயன்படுத்தக்கூடாது என்று கேரள அரசு தடை விதித்துள்ளது.
இதற்கு காரணம் சமீபத்தில் கேரள செவிலியர் ஒருவர் அரளிப்பூ மற்றும் இலையை லேசாக மென்றதால் உயிரிழந்துள்ளார்.
அரளி செடி பயன்கள்
சிவப்பு நிற அரளியில் காற்றை சுத்தப்படுத்தும் பண்புகள் உள்ள நிலையில், சாலை ஓரங்களிலும், சிலர் தங்களது வீட்டிலும் வளர்க்கின்றனர். ஆனால் இவற்றினை குழந்தைகளுக்கு எட்டாத வகையில் வளர்க்க வேண்டுமாம்.
மஞ்சள், சிவப்பு, வெள்ளை என பல வகைகள் காணப்படும் நிலையில், இதில் மஞ்சள் நிற அரளிப்பூ அதிக விஷத்தன்மை கொண்டதாகும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் அரளிப்பூவானது மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆம் தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு இது தீர்வு அளிக்குமாம்.
விஷமாகும் அரளிப்பூ
அரளிப்பூவில் மஞ்சள் நிறம் மட்டும் விஷத்தன்மை கொண்டது கிடையாதாம். அனைத்து வகைகளும் விஷத்தன்மை உடையது என்பதால் அதனை வாயில் போட்டு மென்று சாப்பிடக்கூடாது.
மேலும் அரளியை சாப்பிட்டால் உடனே கார்டியாக் அரெஸ்ட்டை ஏற்படும் என்றும் இதனால் உயிருக்கு ஆபத்து என்று கூறப்படுகின்றது.
மேலும் இப்பூ மற்றும் இலை இவற்றினை சாப்பிட்டாலோ, முகர்ந்து சாப்பிட்டாலோ குமட்டல், டயேரியா, வாந்தி, மயக்கம், சருமத் தடிப்புகள், தலைசுற்றல், மெதுவான மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு போன்றவை ஏற்படுவதுடன், முடிவில் மரணமும் கூட நிகழ அதிக வாய்ப்புள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |