உங்களுக்கு சமைச்சு போட தான் என் அம்மா இருக்காங்களா? விருந்தாளிகளை விளாசிய சிறுவன்
தந்தையின் நண்பர்கள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்த நிலையில், சிறுவன் ஒருவன் விருந்தினரை விளாசிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சவுதி அரேபியாவில் இந்நிகழ்வு நடந்ததாக கூறப்படுகின்றது. குறித்த காட்சியில் தந்தையின் நண்பர்கள் வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளனர்.
தந்தைக்கு உதவியாக சிறுவர்கள் உள்ளே இருந்து சில உணவுகளை எடுத்துவந்து சாப்பிடும் மேசையில் வைக்கின்றனர்.
அதில் ஒரு சிறுவன் வைத்த அடுத்த நொடியில் மிகவும் கோபமாக விருந்தினரை விளாசி தள்ளியுள்ளார்.
யார் இந்த விருந்தாளிகள்? உங்களுக்கு சமைத்து போட தான் தனது தாய் இருக்கிறாரா? நேற்றிலிருந்து சமையலறையிலேயே எனது தாய் இருக்கின்றார்... எல்லாரும் சாப்பிட்டு வெளியே போங்க என்று பயங்கர கோபத்தில் கூறியுள்ளார். இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.