மல்லிப்பூ பாடகியை போஸ்ட் போட்டு கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்! விமர்சகர்களிடம் சிக்கிய டுவிட்டர் பதிவு
மல்லிப்பூ பாடகியை விருது வாங்கிய பாடகிக்கு புகைப்படத்துடன் வெளியிட்டு பங்கமாய் கலாய்த்த ஏ. ஆர் ரஹ்மானின் டுவிட்டர் பதிவு ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
ஆஸ்கர் நாயகன்
தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் பல பாடல்கள் பாடி இரண்டு தடவைகள் ஆஸ்கர் விருது பெற்று இன்று சமூகத்தில் “ஆஸ்கர் நாயகன்” என செல்லமாக அழைக்கப்படுபவர் ஏ. ஆர் ரஹ்மான்.
இவருக்கு “ஸ்லம் டாக் மில்லினர்” என்ற படத்திற்காக பாடல்களை இசையமைத்தற்காக தான் இந்த விருது வழங்கப்பட்டது. இவரின் பாடல்களுக்கு தமிழகம் மட்டுமல்ல பல நாடுகளில் பலக்கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஏ. ஆர் ரஹ்மான், சைரா பானு என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று அழகிய பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இவரை போல இவருடைய மகனும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். இவர் பல இசைக்கருவிகள் வாசிக்கக்கூடியவர் என்பதால் இவருக்கு இசையமைப்பது என்பது சாதாரணமான விடயமாக பார்க்கப்படுகிறது.
சக பாடகியை பங்கமாக கலாய்த்த இசையமைப்பாளர்
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் இவர் தான் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து “வெந்து தணிந்தது காடு” என்ற சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படத்திற்கு இவர் தான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் வெளியான “மல்லிப்பூ ” பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரும் ஹிட் கொடுத்தது. இதனால் அந்த பாடலை பாடிய “மது ஸ்ரீ” க்கு விருது வழங்கியுள்ளார்கள்.
இந்த புகைப்படங்களை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், தமிழ்மொழியை எவ்வாறு இலகுவாக கற்றுக் கொள்வது என்ற லிங்க்கையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், குறித்த பாடகியை பங்கமாய் கலாய்த்தது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Congrats ?…... https://t.co/nI5Oh4sylG https://t.co/jFep5IPRw2
— A.R.Rahman (@arrahman) April 4, 2023