இதுவே உங்கள் வாழ்க்கைக்கான மருந்து.. டெக்னாலஜில் இந்த பக்கம் உங்களுக்கு தெரியுமா?
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை குறிப்பிட்ட சிலர் மாத்திரமே முறையாக பயன்படுத்தி பயனடைகிறார்கள்.
நாம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து கொண்டு, டெக்னாலஜி பற்றி மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்போம். நம்மிள் பலர் பார்த்திடாத ஒரு பக்கம் தொழில்நுட்பத்திற்கு உள்ளது.
அதிலும் குறிப்பாக நீங்கள் எந்தவயதில் இருந்தாலம் தொழில்நுட்பம் உங்கள் வளர்ச்சிக்கான பாதையை காட்டுகிறது. என்ன தான் படித்தாலும், தொழில்நுட்பம் பற்றிய அறிவு தற்போது இருக்கும் காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியம்.
வெறும் கல்லி அறிவை பயன்படுத்தினால் நீங்கள் வாழ்க்கையில் 50 சதவீதம் வளர்ந்தாலும், தொழில்நுட்பம் தொடர்பான அறிவு இருந்தால் நீங்கள் முழுமையடைய வாய்ப்பு உள்ளது.
இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செயலிகள் பற்றி இந்த பதிவில் நீங்கள் விளக்கமாக பார்க்கலாம்.
அன்றாடம் பயன்படுத்த வேண்டிய Apps

1. Notion app
Notion செயலி மூலம் நீங்கள் அன்றாட வேலைகளை குறித்து வைக்கலாம். உங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் Mobile, Laptop வாயிலாக நீங்கள் குறித்து வைத்திருக்கும் குறிப்புகளை பார்த்துக் கொள்ளலாம். இளம் வயதில் இருப்பவர்களுக்கு இது அதிகமாக பயன்படுகிறது. அத்துடன் வேலை, இலக்கு, தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் இங்கு குறித்து வைக்கலாம்.

2. Money manager
வளர்ந்து வரும் தலைமுறையினர் Mobile-ஐ வைத்து என்ன செய்வது என தெரியாமல் விளையாட்டுக்கள், ரீல்ஸ்களில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் வாழ்க்கைக்கு தேவையான Money manager பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இதில் உங்களுடைய வரவு, செலவுகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். GPay / UPI, Credit card தொல்லையால் அவஸ்தையா? அப்படியானவர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

3. kindle
தற்போது புத்தகத்தை கடைகளில் வாங்கி வீட்டில் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு கூட குறிப்புகள் Mobile-ல் தான் அனுப்பப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது kindle உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் உங்களுக்கு தேவையான புத்தகங்களை பார்க்கலாம். அத்துடன் உங்களுடைய தேவையான size, style, layout செய்துக் கொள்ளலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |