தேங்காய் எண்ணெய் டெங்கு காய்ச்சலை விரட்டுமா? பலரும் அறியாத உண்மை
தேங்காய் எண்ணெய் பிடிக்காமல் கொசு கடிக்காமல் இருக்குமே தவிர ஆனால் இந்த செயல் நிரந்தர தீர்வு கிடையாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
டெங்கு
கொசுக்கலால் பரவும் டெங்கு காய்ச்சல், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கு பாதிப்பு ஏற்பட்டுத்துகின்றது. டெங்குவை பரப்பும் கொசு அதிக உயரம் பறக்க முடியாது என்பது உண்மையென்றாலும், இவை முழங்கால் வரை தான் கடிக்கும் என்பது நிச்சயமாக கூறமுடியாது.
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் இனப்பெருக்கம் செய்யும் ஏடிஸ் கொசு டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகின்றது. பருவமழையின் காலநிலை கொசுக்கள் உற்பத்திக்கு ஏற்ற சூழலாக அமைகிறது.
வைத்தியம் என்ன?
சித்த மருத்துவ அடிப்படையில், நிலவேம்புக் கசாயம், மலைவேம்புச் சாறு, பப்பாளிச் சாறு போன்ற சாற்றினை டெங்கு ஆரம்ப நிலையில் 10 மில்லி மட்டும் குடிக்கலாம்.
அது போல் சித்த மருத்துவத்தில் டெங்குவிற்கு அமுக்குராச்சூரணம், ஆடாதோடா இலைச்சாறு போன்றவை கொடுக்கப்படுகிறது.
நிலவேம்பு கசாயத்தை எடுத்துக் கொள்வது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்வது நல்லது.
உணவு முறை:
சூடான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக காரமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பதப்படுத்தப்பட்ட, குளிரூட்டப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
வைட்டமின் சி சத்து அடங்கிய பெரிய நெல்லிக்காய் சாறு, சாத்துக்குடி சாறு பருகலாம்.
ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் காய்கறி சூப்பில் மிளகு சேர்த்தும், கஞ்சி வகைகளையும் எடுத்துக்கொள்ளவும்.
இத்தருணத்தில் நீர்ச்சத்து அதிகம் தேவையென்பதால் தண்ணீர், இளநீர் மற்றும் பழச்சாறு ஆகியவை அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |