கற்றாழையை சருமத்திற்கு பயன்படுத்தினால் என்ன பயன்? அழகுநிபுணர் விளக்கம்
ஆலோவேரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட கற்றாழை அழகு, ஆரோக்கியம் மற்றும் உணவு வணிகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.இது ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் வளர்கிறது.
இந்த கற்றாழையில் அலோயின் , அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் இருக்கின்றன. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள் ரெசின்கள் , பாலிசாச்சரைடு போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.
பன்னிரண்டுக்கும் மேலான பினோலிக் கலவைகள் இதில் உள்ளன. மனித குலத்துக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 அமினோஅமிலங்கள் இதில் உள்ளன. இவை தவிர வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி இதில் உள்ளன.
கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன. இதை அழகிற்கு பயன்படுத்துவதால் என்ன பயன் கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை
கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளதால் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. நமது சருமத்தில் துளைகள் உள்ளன இந்த துளைகளில் நாளாந்தம் அழுக்குகள் நிரம்பும்.
இதற்கு கற்றாழையில் உள்ள சாலிசிலிக் அமிலம் சரும துளைகளில் உள்ள அழுக்குகளை அகற்றி முகப்பருக்களை நீக்க பயனுள்ளதாக உள்ளது. கற்றாழை ஜெல்லில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை அதிகம் இருக்கிறது.
இதனால் அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையைக் குறைக்கிறது. எனவே கற்றாழை ஜெல்லை மட்டும் எடுத்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்து 30 நிமிடத்தின் பின்னர் கழுவினால் நன்மை தரும்.
இதை தவிர எலுமிச்சை சாறுடன் கற்றாழையை கலந்து பூசும் போது எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் முகப்பருக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறை சரிவிகிததத்தில் எடுத்துக் கொண்டு சருமத்தில் தடவினால் போதும். சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. வீட்டில் நிழல் வரக்கூடிய இடங்களில் ஒரு சிறிய சாடியில் கற்றாழையை வளர்த்து வந்தால் சரும அழகிற்கு பயன்படுத்தலாம்.
இதனால் சருமம் ஆரோக்கிமாக இருப்பதுடன் அழகாகவும் காட்சி தருகின்றது. இது தவிர இதை யூஸ் செய்து குடித்தாலும் உடலுக்கு ஆராக்கியம் தருவதுன் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |