குழந்தைகளை கவனிக்க இனி இது இருந்தாலே போதும்: பெற்றோர்களின் கவலையை தீர்க்கும் Smart watch
ஆப்பிள் நிறுவனம் பிள்ளைகளை கவனிப்பதற்கான புதிய அம்சம் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளை கவனிப்பதற்காக சிரமப்படுகிறார்கள்.
இந்த சிரமத்தை குறைப்பதற்காக ஆப்பிள் நிறுவனம் Apple Watch for Your Kids என்ற புதிய அம்சமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதை வீட்டிலிருந்தே கண்காணிக்க முடியும்.
சிறப்பம்சம்
இந்த அம்சத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றால் ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஃபேமிலி குரூப் டூல் அக்சஸ் தேவைப்படுகிறது.
மாறாக நீங்கள் சமீபத்தில் வெளியான ஆப்பிள் வாட்ச் மாடலை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
குழந்தைகள் வெளியில் செல்லும் போது ஐபோனை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஆப்பிள் வாட்ச் எப்படி வேலை செய்கிறது?
1. குழந்தைகளுக்கு Smart phone கொடுக்காமல், Apple Watch-ஐ கையில் கட்டி அனுப்பலாம்.
2. இந்த புதிய Apple Watch For Your Kids சேவையின் மூலம் குழந்தைகள் செல்லும் இடங்களை வீட்டிலிருந்து பார்க்கலாம்.
3. ஆப்பிள் வாட்ச் வழியாக வாய்ஸ் கால் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை அனுப்ப முடியும். இது குழந்தைகள் இருக்கும் Live Location-ஐ காட்டிக் கொடுக்கும்.
4. ஆப்பிள் வாட்ச்சில் தகவல் தொடர்பு, உடல்நலம், உடற்பயிற்சி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
5. ஆப்பிள் வாட்ச்சில் எமர்ஜென்சி SOS பட்டன் உள்ளது. இதனால் குழந்தைகள் பிரச்சினையில் இருப்பதை உணர்த்தலாம். உடனடியாக உதவிக்கு அழைக்கவும்.
6. எஸ், Find My என்பது குழந்தைகள் இருக்கும் இடத்தைக் கண்காணிக்க உதவும் மற்றொரு Tool ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |