ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ மாடல்களின் புதிய அப்டேட்! தற்போதைய விலை என்ன?
ஆப்பிள் நிறுவனம் தற்போது அப்டேட் செய்து புதிய மொடல்களை அறிமுகம் செய்த நிலையில், ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மெடல்களில் விபரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஐபேட் ஏர் மாடல்
ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், இவை 11 மற்றும் 13 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றது.
புதிய ஐபேட் ஏர் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் M2 சிப்செட் கொண்டிருக்கிறது. ஏ ஐ பிராசஸரை இயங்கும் திறன் கொண்டுள்ளது. மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட்டுடன் கிடைக்கின்றது.
புதிய ஐபேட் ஏர் மாடல் குறைந்தபட்சம் 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கின்றன. மேலும் இதில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜும், 12MP கேமரா, டச் ஐ.டி., வைபை 6E போன்ற வசதிகள் உள்ளன.
ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருப்பதுடன் இதன் இந்திய விலை விபரமும் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புதிய சாதனத்தின் இந்திய விலையை தெரிந்து கொள்வோம்.
ஐபேட் ஏர் 2024
11 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900 ஆகும். அதுவே 11 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 990 ஆகும்.
ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900
ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 900. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் மே 15ம் தேதி தொடங்குகின்றது.
ஐபேட் ப்ரோ
11 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 900, அதுவ வைபை +செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 ஆகும்.
இந்த மொடலானது சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைப்பதுடன், க்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.
ஆப்பிள் பென்சில் ப்ரோ விலை ரூ. 11 ஆயிரத்து 900, மேஜிக் கீபோர்டு ரூ. 29 ஆயிரத்து 900 என்றும் 13 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 33 ஆயிரத்து 900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.