ஐபோன் மாடலை நிறுத்தப்போகும் ஆப்பிள்... இந்த மாடலின் விலையையும் குறைக்கபோகிறதாம்!
முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது பிரபலமான ஐபோன் மாடல் விற்பனையை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஐபோன் 14 சீரிஸ் வெளியீடு மட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11 சீரிஸ் மாடல்கள் விற்பனையை இந்த ஆண்டு நிறுத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐபோன் 11 சீரிஸ் மாடல்கள் 2019 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி இந்திய சந்தையில் ஐபோன் 11 மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 900 என துவங்குகிறது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் SE 3 அல்லது ஐபோன் SE 2022 மாடலின் விலை ரூ. 43 ஆயிரத்து 900 என துவங்குகிறது. விற்பனை நிறுத்தத்தை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் விலையை குறைக்கலாம் என கூறப்படுகிறது.
திடீரென சரிந்த தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி!
தொடர்ந்து, ஐபோன் 12 சீரிஸ் விலை ரூ. 65 ஆயிரத்து 900 என துவங்குகிறது. ஐபோன் 12 விலையை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 45 ஆயிரத்து 672 ஆக குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் விலை தற்போது 999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 76 ஆயிரத்து 170 என துவங்குகிறது. மேலும், ஐபோன் 12 மாடலின் விலை தற்போதைய ஐபோன் 11 விலையில் கிடைக்கும்.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட் ஐபோன் 13 சீரிஸ் விற்பனை அடுத்த சில ஆண்டுகளுக்கு தடையின்றி நடைபெறும்.